Vellalar Mudaliar Chamber of Commerce

AboutAbout us

அன்பார்ந்த சொந்தங்களே!

“பொருளாதார முன்னேற்றமே சமுதாய முன்னேற்றம்!!”

வெள்ளாளர் முதலியார் சேம்பர் ஆப் காமர்ஸ் (VMC) என்பது, நமது சமூக மக்கள் தொழில் மற்றும் வணிகத் துறைகளில் அனைத்து துறைகளிலும் முன்னணியில் உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

2014 ஆம் ஆண்டு, சோமு டிராவல்ஸ் திரு. சோமு, பாண்டியன் ஊறுகாய் திரு. G. கந்தசுவாமி, காஸ்மா பிளாஸ்டிக் திரு. முருகானந்தம் ஆகியோரின் முன்முயற்சியில் “வெள்ளாளர் கார்ப்ரேட் போரம்” என தொடங்கப்பட்ட இந்த முயற்சி, பின்னர் VMC விசால் குழும தலைவர் திரு. R. இளங்கோவன் அவர்களின் தலைமையில், 2016 ஆம் ஆண்டு பதிவு பெற்று “வெள்ளாளர் முதலியார் சேம்பர் ஆப் காமர்ஸ்” என வளர்ச்சி பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

 

ஒரு சமூகத்தின் முன்னேற்றம் கல்வி மற்றும் வணிக வளர்ச்சியில்தான் அடங்கி உள்ளது.
எந்த சமுதாயம் இந்த இரண்டிலும் முன்னேறுகிறதோ, அதுவே முன்னணியில் நிற்கும் சமூகமாக மாறுகிறது.

இன்றைய நிலையில், தொழில் மற்றும் வணிகத் துறைகளில் நமது சமூகத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது. அதற்காக, நமது சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது மிக அவசியமாகிறது.

VMC உறுப்பினர் தகுதி:
வெள்ளாளர் முதலியார் சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் சேர்ந்த தொழில் மற்றும் வணிகம் செய்பவர்கள் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.

நோக்கம் & செயல்திட்டம்:

image

உறுப்பினர்களுக்கிடையில் வணிக வலைப்பின்னலை (Networking) உருவாக்குதல்

image

வணிக முன்னேற்றத்திற்கு பரஸ்பர ஆதரவு அளித்தல்

image

புதிய தொழில் வாய்ப்புகளை பகிர்ந்து, புதிய தொழில்முனைவோரை உருவாக்குதல்

image

உறுப்பினர்கள் கற்றறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து வளர்ச்சி அடைய செய்தல்

image

வணிக கூட்டங்கள், பயிற்சிகள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகள் நடத்துதல்

image

புதிய தொழில்நுட்பங்களை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்துதல்

image

உலகளாவிய வணிக வளர்ச்சிக்கான நிபுணர் ஆலோசனைகள் பெறுதல்

image

ஒவ்வொரு கூட்டத்திலும் உறுப்பினர்களிடையே கிடைத்த Leads & Referrals பகிர்வு

செயல்பாடுகள்

உலகமயமாக்கல் வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்தில், நமது சமூக தொழிலதிபர்கள் உலகம் முழுவதும் இணைந்தால், VMC உலகின் முன்னணி சேம்பர் ஆப் காமர்ஸ்களில் ஒன்றாக உயர்ந்திடும்.

நமது இனத்தவர் அனைத்து துறைகளிலும் முன்னணி தொழிலதிபர்களாக உருவாக வேண்டும் என்பதே எங்கள் கனவு.

  • மாதந்தோறும் வணிக கூட்டம் (இரவு விருந்துடன்)
  • உறுப்பினர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு
  • உறுப்பினர்களின் அனுபவம், திறமை, மற்றும் தொடர்புகள் மூலம் மற்றவர்களுக்கு உதவி

எனவே, தொழில் மற்றும் வணிகம் செய்பவர்களே!
VMC-இல் இணைந்து பயன் பெறவும், மற்றவர்களுக்கும் பயன் அளிக்கவும் அன்புடன் அழைக்கிறோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.